டிவி, மொபைல் பார்க்க குழந்தைகளுக்கு தடை விதித்த அரசு! எந்த நாட்டில் தெரியுமா?
டிஜிட்டல் ஊடகங்களை குழந்தைகள் பார்ப்பதை சற்று தவிர்க்க வேண்டும் என ஸ்வீடன் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
ஸ்வீடன் : 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் டிஜிட்டல் ஊடகங்ளை அணுகவதால் பாதிப்பு ஏற்படுகிறது என புதிய ஆய்வறிக்கையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், ஸ்வீடன் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரும் டிவி, மொபைல் உபஜியோகிக்க கூடாது என தடை விதித்துள்ளனர். இது, ஸ்வீடன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் பெரும்பாலான சிறுவர்கள் குழந்தைகள் தீவிரமாக மொபைல், டிவி மற்றும் இணையத்தளம் போன்ற விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர்.
இது ஒரு வகையில் நல்ல விஷயம் என்று வரவேற்றாலும் பல தீங்கு விளைவிக்கும் இணையத்தளத்தை பார்வையிடவும் வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது.இதனை தாண்டி அதிக நேரம் மொபைல் மற்றும் டிவி பார்ப்பதால் சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகிறது என ஆய்வின் முடிவில் தெரிந்துள்ளது.
இதனால் சில நிபந்தனைகளுடன் டிவி, மொபைல் பார்த்தால் அது நல்லது என ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அந்த குழந்தைகளை செல்போன் பார்க்க அனுமதிக்க கூடாது என அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஸ்வீடன் நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், 2-5 வயதுள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே செல்போன் மற்றும் டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதே போல, 6-12 வயது உடைய குழந்தைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை டிவி, மொபைல் பார்க்க அனுமதிக்கலாம் எனவும் ஸ்வீடன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
13 முதல் 18 வயது உடையவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி முதல் 3 மணி நேரம் மட்டுமே செல்போன், டிவியை பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த புதிய உத்தரவால் ஸ்வீடன் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.