இன்று முதல் எஸ்வி வங்கி டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை பெற்று கொள்ளலாம் – அமெரிக்க நிதியமைச்சர் அறிவிப்பு
சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அமெரிக்க அரசு உறுதி.
சிலிக்கான் வேலி வங்கி திவால்:
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளின் ஒன்றான 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank) மூடப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) தெரிவித்திருந்தது. அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பங்குச் சந்தை வீழ்ச்சி:
சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சி பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியாகும், கலிபோர்னியா மற்றும் மாசசூசெட்ஸில் மொத்தம் 17 கிளைகள் உள்ளன. சிலிக்கான் வேலி வங்கியின் தாய் நிறுவனமான SVB ஃபைனான்சியல் குழுமத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் சரிவை சந்தித்தது.
நிதி நெருக்கடி:
இவ்வாறு பல்வேறு நிதி சிக்கல்களை எதிர்கொண்டு கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் பிரபலமான சிலிக்கான் வேலி வங்கியானது அதன் கட்டுப்பாட்டாளர்களால் மூடப்படுவட்டதாக அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவில் Washington Mutual வங்கி வீழ்ந்தது மிக பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்பட்டது.
சொத்து மதிப்பு:
இப்போது நடந்திருப்பது அமெரிக்க வங்கி துறையில் நிகழ்ந்த இரண்டாவது மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். கடந்த ஆண்டின் கடைசியில் எஸ்வி வங்கியின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலருக்கு மேல் இருந்தது. அந்த வங்கியில் செலுத்தப்பட்ட வைப்புத் தொகையின் மதிப்பு சுமார் 175 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
அமெரிக்க அரசு உறுதி:
250,000 அமெரிக்க டாலர் காப்பீட்டு வரம்பு வரை அதன் வைப்பாளர்களுக்கு (கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது.
நிதி அமைச்சர் ஜேனட்:
டெபாசிட்தாரர்களின் பணத்தை பாதுகாக்கும் வங்கியில் சிலிக்கான் வேலி வங்கி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் சிலிக்கான் வேலி (SVB) வங்கியின் டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் அறிவித்துள்ளார்.