விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்து, உலகளவில் பெருமை சேர்த்துள்ளார்.

sunita williams

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் திட்டமிட்டபடி திரும்பவில்லை. இதையடுத்து நாசா, ஸ்பேஸ் எக்ஸ் முயற்சியால் SpaceX Crew-9 விண்கலம் மூலம் 9 மாத காத்திருப்புக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் ஆய்வுப் பணிக்காக சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் 270 நாட்களுக்கும் மேலாக அங்கேயே சிக்கியிருந்த நிலையில், இந்திய நேரப்படி சரியாக 3.27 AMக்கு அவர்கள் புளோரிடா கடல்பகுதியில் இறங்கினார். இதன் மூலம், விண்வெளியில் அதிக நாட்களை கழித்த நாசாவைச் சேர்ந்த வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடம் (608 நாட்கள்) பிடித்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளார். மேலும், விண்வெளியில் ஒரே பயணத்தில் அதிக நாட்களை கழித்த வீரர்களின் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ளார்.

இப்படி பல ஆகாய வாழ்க்கை அனுபவித்த விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸ், ஒரு தனித்துவமான பயணத்தை மேற்கொண்டவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான இவர், தனது வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்து, உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளார். அவரது பாதையைப் பற்றி ஒரு சுருக்கமான பார்வை பார்க்கலாம்.

பிறப்பு மற்றும் படிப்பு

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலாசன் கிராமம் தான் சுனிதாவின் பூர்வீகம். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை தீபக் பாண்டியா ஒரு இந்திய மருத்துவர், தாய் பொன்னி பாண்டியா ஸ்லோவேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே அறிவியலிலும் சாகசத்திலும் ஆர்வம் கொண்டிருந்த சுனிதா, தனது கல்வியை அமெரிக்க கடற்படை அகாடமியில் 1987 இல் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் 1995 இல் பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார்.

விண்வெளி பயணத்தின் நுழைவு

தனது ஆரம்ப வாழ்க்கையை அமெரிக்க கடற்படையில் தொடங்கிய சுனிதா, ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். 3000 மணி நேரத்திற்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்ற அவரை விண்வெளி ஆய்வு பணிக்கு தயார்படுத்தியது. 1998 ஆம் ஆண்டு நாசாவால் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனிதா, தனது முதல் விண்வெளி பயணத்தை 2006 இல் மேற்கொண்டார்.

சாதனை நாயகி சுனிதா

வில்லியம்ஸின் முதல் விண்வெளிப் பயணம் டிசம்பர் 9, 2006 அன்று தொடங்கியது. டிஸ்கவரி விண்ணோடத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்றார். அப்போது 195 நாட்களுக்கு மேல் விண்வெளியில் செலவிட்டார். 2007 இல், விண்வெளியில் மராத்தான் ஓடிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்தார். சுனிதாவுக்கு 2008-ஆம் ஆண்டு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

அவரது இரண்டாவது பயணம் 2012 இல் நடைபெற்றது. அப்போது சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று 127 நாட்கள் தங்கினார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தி முதல் மற்றும் இரண்டாவது முறையும் சேர்த்து மொத்தமாக 50 மணி நேரத்திற்கும் மேல் விண்வெளி ட்ரெட் மில்லில் ஓடி பெண்கள் மத்தியில் சாதனை புரிந்தார்.

சுனிதாவின் மிக சமீபத்திய பயணமான 2024 ஜூன் 5-ம் தேதி அன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் சோதனைப் பயணத்தில் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். எட்டு நாட்கள் தங்க திட்டமிடப்பட்டிருந்த இப்பயணம், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நெடு தூரம் நீடித்தது. சுமார், 286 நாட்களுக்குப் பிறகு, இன்று ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்பினார்.

இதுவரை இரு முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், 322 நாள்களை கழித்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 900 மணி நேரம் 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong