சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்பதற்காக க்ரூ 10 மீட்புக் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றடைந்தனர்.

Stranded Astronauts Face Painful Return

கலிபோர்னியா : பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸூம், வில்மோரும் விரைவில் வீடு திரும்ப போகின்றனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை இணைந்து கடந்த மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு புதிய குழுவினரை அனுப்பியது.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அங்கு சிக்கித் தவித்த இரண்டு விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் திரும்புவதற்கு போராடி வருகின்றனர் நாசா குழுவினர். மார்ச் 14 அன்று இரவு 7 மணியளவில் புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டது.

இதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷியா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் சென்ற விண்கலம் , சர்வதேச விண்வெளி மையத்தை இந்திய நேரடி இன்று (மார்ச் 16) காலை 8 மணியளவில் சென்றடைந்தது.

மீட்புக்குழுவினர் சென்ற நாசாவின் crew-10 பயணித்த ஸ்பேஸ் டிராகன் ஓடம் இந்திய நேரப்படி 9.37 மணிக்கு வெற்றிகரமாக ISS உடன் இணைந்தது. சரியாக ஒன்றே முக்கால் மணி நேரத்திற்குப் பின் அதிலிருந்து விண்வெளி வீரர்கள் அன்னே மெக்கெலைன், நிக்கோலே, டாகுயா ஒனிஷி, கிரில் பெஸ்கோவ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் உள்ளே செல்லவுள்ளனர்.

இதை தொடர்ந்து, வரும் 19ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நிலவும் வானிலை மாற்றங்களை பொறுத்து விண்கலமானது தரையிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலமாக சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை பாதங்கள் :

விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பிய பின் “குழந்தை பாதங்கள்” என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் நிலை காரணமாக நடக்க சிரமப்படலாம் என்று கூறப்படுகிறது. “குழந்தை பாதங்கள்”
என்பது ஒரு பொதுவான கால் நிலை ஆகும் நீண்ட கால விண்வெளி பயணங்களின் போது விண்வெளி வீரர்களின் பாதங்கள் குழந்தைகளைப் போல மென்மையாக மாறும் போது இது நிகழ்கிறது. பூமியில், ஈர்ப்பு மற்றும் உராய்வுகளால் உள்ளங்கால்களில் உள்ள தோலை இறுக்கமாக்க உதவுகின்றன, இதனால் நாம் நடக்க, ஓட மற்றும் அசௌகரியம் இல்லாமல் நிற்க முடிகிறது.

இரத்த அளவு இழப்பு:

இதயம் ஈர்ப்பு விசைக்கு எதிராக இரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியதில்லை, எனவே அது குறைவாக வேலை செய்வதால் விண்வெளி வீரர்களும் இரத்த அளவு குறைவை எதிர்கொள்கின்றனர். சில பகுதிகளில் இரத்த ஓட்டம் மெதுவாகலாம், இது இரத்த உறைவுகளுக்கு வழிவகுக்கும். உடலில் திரவங்கள் மேல்நோக்கி நகர்ந்து, முகத்தில் வீக்கம் ஏற்பட்டு, திரவங்கள் வெளியேறுவதை கடினமாக்குகிறது.

எலும்பு அடர்த்தி இழப்பு:

புவியீர்ப்பு விசை இல்லாதது எலும்பு அடர்த்தியையும் பாதிக்கிறது. ஏனெனில் எலும்புகள் பூமியில் இருப்பது போல் உடலின் எடையைத் தாங்க வேண்டியதில்லை. விண்வெளி வீரர்கள் இந்த இழப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைகள் எடுக்காவிட்டால், அவர்களின் எடை தாங்கும் எலும்புகள் தோராயமாக 1% குறைவான அடர்த்தியாக மாறும் என்று நாசா கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்