சோமாலியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…21 பேர் பலி.!
சோமாலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் இருக்கும் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது.
இதில், ஷபெல்லே மற்றும் ஜூபா பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பலர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
மேலும், இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. 21 பேர் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த நிலையில், அந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.