சூடானில் நடைபெற்று வரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில் இந்தியர்களுக்கு உதவ எம்இஏ (MEA) கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது.
சூடானில் ராணுவ மோதல் :
சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் ராணுவ மோதல் நிலவி வருகிறது.
அதிகரித்த உயிரிழப்பு :
இந்த மோதலில் கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் ஏற்கனவே 180 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறை :
சூடானில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வரும் நிலையில் இந்தியர்களுக்கு 24×7 உதவும் வகையில் வெளியுறவு அமைச்சகம் (MEA) சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் எண் +91-8010611290, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-11-8797 மற்றும் பிற எண்கள் +91-11-23012113; +91-11-23014104; +91-11-23017905, +91-9968291988 ஆகியவற்றிக்கு தொடர்பு கொள்ளலாம். வெளியுறவு அமைச்சகதால் (MEA) பகிரப்பட்ட மின்னஞ்சல் ஐடி situationroom@mea.gov.in ஆகும்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…