சூடான் ராணுவ மோதல்..! இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் வெளியேற்றம்..!
இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் சூடானில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் அறிக்கையைப் பகிர்ந்துள்ளது.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் பயங்கரமாக தாக்குதல் நடந்து வருவதால் சூடான் முழுவதும் பபரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இறந்தவர்களில் 9 குழந்தைகளும் அடங்கும். தாக்குதலால் குறிப்பாக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சூடானில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் அங்கு சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 388 பேர் வெளியேற்றப்பட்டதாக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் அறிக்கையில், “பிரெஞ்சு வெளியேற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. நேற்று இரவு, இரண்டு இராணுவ விமானங்களில் சுழற்சி முறையில் இந்திய பிரஜைகள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் வெளியேற்றப்பட்டனர்,” என்று தெரிவித்துள்ளது.
#Sudan | French evacuation operations are under way. Last night, two military flight rotations evacuated 388 people of 28 countries, including Indian nationals. ???????????????????? pic.twitter.com/CrXeOH9UmD
— French Embassy in India ???????????????? (@FranceinIndia) April 24, 2023