இங்கிலாந்து இளவரசிக்கு இப்படி ஒரு துயரமா? பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சோகம் ..!!
கேட் மிடில்டன்: கடந்த மார்ச் மாதம், இங்கிலாந்து இளவரசியான கேட் மிடில்டன் ஒரு காணொளியின் மூலம் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும், அவர் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கேட் மிடில்டன் இந்த வருடம் நடைபெறும் எந்த ஒரு பொது நிகழ்விளும் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளது. அதன்படி, இளவரசியின் பங்கேற்பு இல்லாத நிலையில் அரச பணிகள் தொடர்பான பல அறிக்கைகளும் வெளியாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதன் மூலம் இந்த மாதம் வருகிற ஜூன்-8ம் தேதி நடைபெற இருந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான கர்னலின் மதிப்பாய்வில் (Colonel’s Review) கேட் மிடில்டன் கலந்து கொள்ள மாட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் அவரே முதன்மை பங்கேற்பாளராக இருந்திருக்க வேண்டிய நிலையில் தனியுரிமை தேவைகாரணமாக அவர் நிகழ்வில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது.