கிங் சார்லஸுக்கு இப்படி ஒரு ராஜமரியாதையா…? பாஸ்போர்ட் இல்லா பயணம்..! வருடத்தில் 2 பிறந்தநாள்…!
பிரிட்டனின் புதிய அரசராக பதவியேற்றுள்ள கிங் சார்லஸுக்கு வழங்கப்படும் ராஜ மரியாதை.
பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். புதிய அரசராக பதவியேற்றுள்ள மன்னர் சார்லஸுக்கு சில ராஜ மரியாதைகள் வழங்கப்பட உள்ளது.
பாஸ்போர்ட் இல்லா பயணம்
புதிய அரசராக பதவியேற்றுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னர் கடவுச்சீட்டு இல்லாமல் வெளிநாடு செல்லலாம், ஏனெனில் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போலல்லாமல், அவருடைய பெயரில் ஆவணம் வழங்கப்படும் என்பதால் அவருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை.
அதே போல், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டலாம். பிரிட்டனில் ரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடிய ஒரே நபர் மன்னர் மட்டுமே.
வருடத்தில் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்
புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒரு வருடத்தில் இரண்டு பிறந்தநாட்களை கொண்டாடுவார். நவம்பர் 14 அன்று சார்லஸின் பிறந்தநாள் குளிர்காலத்தின் தொடக்கத்தில் இருப்பதால், வெப்பமான மாதத்தில் அவருக்கு “அதிகாரப்பூர்வ பிறந்தநாளும்” இருக்கும்.
மன்னர் சார்லஸின் தயார் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு இரண்டு பிறந்தநாள்கள் இருந்தன. ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், வானிலையைப் பொறுத்து ஒவ்வொரு ஜுன் மாத சனிக்கிழமையும் உத்தியோக ரீதியில் மற்றொரு பிறந்தநாளைக் கொண்டாடுவார்.
மன்னர் வாக்களிப்பதில்லை
பிரிட்டன் மன்னர் வாக்களிப்பதில்லை, தேர்தலில் நிற்க முடியாது. அரச தலைவர் என்ற முறையில், அவர் அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நடுநிலையாக இருக்க வேண்டும்.
மன்னரின் சொத்தாகும் அன்னப்பறவைகள்
மன்னர் சார்லஸ் மக்களை மட்டும் ஆட்சி செய்வதில்லை. 12-ஆம் நூற்றாண்டிலிருந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் திறந்த நீரில் குறிக்கப்படாத அன்னப்பறவைகள் மன்னரின் சொத்தாகக் கருதப்படுகிறது. மேலும், அரச சிறப்புரிமை நீரில் உள்ள ஸ்டர்ஜன் வகை மீன்கள், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கும் பொருந்தும்.