இந்தோனேசியாவின் சுமத்ராவிற்கு தென்மேற்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம்.!
இந்தோனேசியாவின் சுமத்ராவின் தென்மேற்கில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் சுமத்ராவின் நேற்று வெள்ளிக்கிழமை, தென்மேற்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக, ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் EMSC கூறியது. நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை மற்றும், உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என அறிவித்துள்ளது.