பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்! 42 பேர் பலி, பத்திற்கும் மேற்பட்டோர் காணவில்லை.!
பிலிப்பைன்ஸில் நல்கே புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல நல்கே புயலால் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு மாகாணமான மகுயிண்டனாவோவில் பிலிப்பைன்ஸ் தேடல் மற்றும் மீட்புக் குழுவினரால் மேலும் பதினொரு உடல்கள் மீட்கப்பட்டன, மேலும் நிறைய பேரைக் காணவில்லை அவர்கள் நிலச்சரிவினால் மண்ணில் புதைக்கப்பட்டிருக்காம் என்று அஞ்சப்படுகிறது என்று பாங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்தின் உள்துறை அமைச்சர் நகுயிப் சினாரிம்போ கூறினார்.
ஆயிரக்கணக்கான மக்களை மீட்புக்குழுவினர் ரப்பர் படகின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். பிலிப்பைன்ஸில் வருடத்திற்கு சராசரியாக 20 சூறாவளி மற்றும் புயல்கள் தாக்குகின்றன. எதிர்பார்த்ததை விட இந்த முறை அதிக மழை பெய்துள்ளதாக தெரிவித்தனர்.
பல இடங்களில் பள்ளிகள் மூடல், வேலைகள் முடக்கம், மற்றும் விமானங்கள் நிறுத்தம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த புயல் பிலிப்பைன்ஸ் கடலில் மேலும் வலுவடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.