3 மணிக்கு மேல் ட்வீட் செய்வதை நிறுத்துங்கள்…எலான் மஸ்க்-ஐ கலாய்த்த ட்விட்டர் சிஇஓ லிண்டா.!!

Elon Musk and LindaYaccarino

உலக பணக்காரர்களில் மிக முக்கிய நபரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து யாரும் எதிர்பார்த்திராத ப்ளூ டிக் கட்டணம், ஆள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் புதிய தலைமை டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை அதிகாரி (CEO) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் இன்னும் 6 வாரத்தில் பணியை தொடர்வார் எனவும் , அவர் டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை அதிகாரியாக தொடர்வார்  என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டிவிட்டரில் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பதை எலான் மஸ்க் விளக்கியபோது, டிவிட்டரின் புதிய CEO-ஆக பொறுப்பேற்ற லிண்டா யாக்காரினோ  “உங்கள் ட்வீட்களுக்கு இது பொருந்துமா” என கிண்டலாக விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் “எலான் மஸ்க் காலை 3:00 மணிக்குப் பிறகு ட்வீட் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.  இவ்வாறு அவர் கலகலப்பாக பேசியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேலும்,  லிண்டா யாக்காரினோ கூறியதற்கு மஸ்க் “அதிகாலை 3:00 மணிக்குப் பிறகு குறைவாக ட்வீட் செய்ய விரும்புகிறேன்” என்று பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்