1.3கோடி உணவு ரசீது படம் குறித்த விமர்சனம் முடிவதற்குள், தங்கத்தாளில் மாமிசம் வைத்த படத்தையும் வெளியிட்ட சால்ட் பே.
துருக்கி நாட்டைச்சேர்ந்த உலகின் பணக்கார செஃப்(Chef) ‘சால்ட் பே’ என்று அழைக்கப்படும் நுஸ்ரத் கோக்சே, சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருபவர். சால்ட் பே, உப்பை சமையலில் தூவும் விதத்திற்காக முதன்முதலில் வைரலானார். இவருக்கு உலகம் முழுவதும் 22 நுஸ்ரத் உணவகங்கள் உள்ளன.
இவரது லண்டன் உணவகத்தின் விலைப்பட்டியல், கடந்த ஆண்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் ஆகஸ்ட் மாதம், அவரது நிறுவனமான நுஸ்ரத் யுகே லிமிடெட் ரூ. 22.21 கோடி லாபம் பெற்றதாக கணக்கு விவரங்களை வெளியிட்டது.
சால்ட் பே, 24 காரட் தங்கம் பூசப்பட்ட தாளில் வைக்கப்பட்ட மாமிசத்தின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மீண்டும் வாயடைக்க வைத்துள்ளார். சால்ட் பே சில தினங்களுக்கு முன் தனது அபுதாபி உணவகத்தில் ஒரு குழுவினர் சாப்பிட்ட உணவு ரசீதை வெளியிட்டார்.
அந்த குழுவினர் கடந்த ஆகஸ்டில் சால்ட் பே உணவகத்தில் சாப்பிட்டதற்கன பில் தொகை மட்டும் ரூ.1.3 கோடி ஆகும். அதாவது ஒரு நபருக்கு ரூ. 9.69 லட்சம் செலவாகியுள்ளது. இந்த ரசீதை சால்ட் பே வெளியிட்டு பெரும் புயலை கிளப்பியிருந்தார்.
அந்த உணவு பட்டியலில் போர்டியாக்ஸ் பக்லாவா எனும் உலகின் மிக உயர்ந்த ஒயின் மற்றும் தங்கம் பூசப்பட்ட தாளில் வைக்கப்பட்ட மாமிசம் என விலையுயர்ந்த உணவுகள் அடங்கும். இவர்கள் சாப்பிட்ட தொகையில் ஒரு கிராமத்திற்கே உணவளிக்கலாம் என சமூக ஊடகவாசிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சால்ட் பே, “தரத்திற்கு விலை கிடையாது” என்ற தலைப்பில் தனது அடுத்த பதிவான 24 காரட் தங்கம் பூசப்பட்ட தாளில் வைக்கப்பட்ட மாமிசத்தின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…