இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் வீரர்களுக்கு விரைவில் விடுதலை.! பிரதமர் புதிய தகவல்.!
2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு 13 வருடங்களாக இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் வீரர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உறுதியளிதுள்ளார்.
இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு இடையேயும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்த போரானது கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்த பின்னர் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கபட்டனர். போர் முடிந்து 13 வருடங்கள் கடந்தும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருக்கும் விடுதலை புலிகள் வீரர்களை விடுவிக்க கோரி, பல்வேறு நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தினர்.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்திலும் இதற்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் தினேஷ் குணவர்தனே, இலங்கை சிறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் வீரர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர்.
இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தயார் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உறுதியளித்தார்.