அதள பாதாளத்தில் இலங்கை பொருளாதரம்.. கரணம் இவங்க தான்… உச்சநீதிமன்றம் பரபரப்பு.!
2020, 2021 கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டன. சில பெரும் நாடுகளின் பொருளாதாரங்கள் கூட சற்று அதிர்வை கண்டது. இந்த பொருளாதார ரீதியிலான சிக்கலில் சிக்கி அடுத்தடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியது.
பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் அதிகரித்து , அதன் இறக்குமதி குறைந்து விலைவாசி உச்சம் தொட்டது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயம் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அப்போதைய அரசாங்கம் கலைந்தது. பிரதமர், அதிபர் என வெளிநாடு தப்பித்து செல்லும் நிலைக்கு சென்றனர்.
டிக் டாக் தடை… நேபாளம் அதிரடி நடவடிக்கை.!
இப்படியான இலங்கை பொருளாதர வீழ்ச்சிக்கு அப்போதைய கோத்தபய ராஜபக்சே அரசு தான் காரணம் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை (TISL) அமைப்பை சேர்ந்த சந்திர ஜயரத்ன, ஜெஹான் கனகரெட்னா மற்றும் ஜூலியன் பொலிங் ஆகியோர் இணைந்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
இலங்கையில் தற்போதும் நிலவும் நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அந்த பொதுநல மனுவில் கோரபட்டு இருந்தது. இதன் வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வெளியானது. அதில், இலங்கையின் பொருளாதர ரீதியான வீழ்ச்சிக்கு இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்ச, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பலர் காரணம் என கூறி பரபரப்பு தீர்ப்பை அளித்தனர்.