இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரகுமாரா திசாநாயக்கவின் NPP கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க பதவி ஏற்றார். அதன் பிறகு நாட்டில் சட்டதிருத்தங்களை விரைவாக கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதமே இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் இலங்கை புதிய அதிபர். அதன் பிறகு இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று (நவம்பர் 14) முடிந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஆரம்பம் முதலே அனுர குமார திசாநாயக்ககின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று வந்தன.
இலங்கையில் உள்ள மொத்தம் 225 இடங்களில் 196 இடங்களுக்கு மக்கள் வாக்களித்தது உறுப்பினர்களை தேர்வு செய்வர். மீதமுள்ள 29 தொகுதிகளுக்கு கட்சிகளுக்கான வாக்கு சதவீதம் பொறுத்து உறுப்பினர்களை அரசியல் கட்சியினரே தேர்வு செய்வர். 196 இடஙக்ளில் 3இல் 2 பங்கு அதாவது 113 இடங்களில் வெற்றி பெற்று ஒரு கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்
இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அதிபர் அனுரகுமாரா திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) மொத்தம் 123 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. இதுநாள் வரையில் நாடாளுமன்றத்தில் 3வது கட்சியாக இருந்த அனுர குமார திசாநாயக்க கட்சி, இந்த முறை அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. இலங்கையில் பிரதானமாக செயல்பட்டு வந்த SJP 31 இடங்களையும், SLPP அ இடங்களை மட்டுமே பிடித்து படு தோல்வி அடைந்துள்ளன.
இலங்கையில் அதிபருக்கே அதிக முக்கியத்துவம் என்றாலும், நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவை. அதனை தற்போது தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெற்றுள்ளது. இனி , இலங்கையில் பல்வேறு புதிய சட்டதிருத்தங்களை அதிபர் அனுர குமார திசாநாயக்க கொண்டு வருவார் எனக் கூறப்படுகிறது .