மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இனி மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை இல்லை. நடவடிக்கை தான் என இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுவதும், பிறகு இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்கதையாகி கொண்டே இருக்கிறது.

அண்மையில் இலங்கை அதிபர் டெல்லி வந்த போது கூட, பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்கள் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தார். மீனவர்கள் சுருக்கும்டி வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அதனால், கடல் வளங்கள் அழியும் நிலை ஏற்படும் என இலங்கை அதிபர் வலியுறுத்தினார்.

இப்படியான சூழலில், தற்போது இலங்கை அமைச்சர் சந்திரசேகர் இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” இந்திய மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை எல்லாம் இனி கிடையாது. எல்லாம் முடிந்தது. இனி யாருடனும் இதுகுறித்து பேச்சுவார்த்தை இல்லை.

இலங்கை அரசும்  இந்திய அரசும் பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன. அது வேறு மாதிரியான பிரச்சனைகள் குறித்து பேசுவார்கள். தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகள் குறித்து பேசுவார்கள். இனி மனிதாபிமான அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்ல போவதில்லை. இனி நடவடிக்கை தான். இழுவை படகுகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். ” என இலங்கை அமைச்சர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்