கச்சதீவு பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்த இலங்கை.!  

Sri Lanka Speak about Katchatheevu Issue

Katchatheevu : கச்சதீவு பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி

இந்தியா வசம் இருந்த கச்சதீவானது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், அப்போதைய தமிழக அரசு பொறுப்பில் இருந்த திமுக இதற்கு உடந்தையாக இருந்தது என்றும் பாஜக சமீபத்தில் குற்றம் சாட்டியது. இது தொடர்பான தகவல் அறியும் உரிமை சட்ட அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், காங்கிரஸ் கட்சி காலத்தில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டினர். இதனை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்தது. அருணாச்சல பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்புகள் குறித்த செய்தியை திசை திருப்பவே பாஜக இப்படி பொய் வதந்திகளை பரப்புகிறார்கள் என குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் இலங்கைகான இந்திய தூதர் கருத்து கூறியிருந்த போதிலும், இலங்கை அரசு சார்பில் யாரும் அதிகாரபூர்வ தகவலை தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி இது குறித்த அதிகாரபூர்வ கருத்தை கூறியுள்ளர்.

அவர் குறிப்பிடுகையில், இது உள்நாட்டு அரசியலில் ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் விஷயம் அல்ல. கச்சத்தீவு விவகாரம் சர்வதேச ஒப்பந்தம். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. இதற்கு யார் பொறுப்பு என இந்தியாவில் விவாதம் நடத்துகிறார்கள். ஆனால் கச்சத்தீவுக்கு உரிமை கோருவது பற்றி அந்நாட்டு அரசு பேசவில்லை.

இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கியதற்கு யார் பொறுப்பு.? அது இப்போது எந்த நாட்டுடைய கட்டுப்பாட்டில் உள்ளது.? என்பது பற்றிய விவாதம் நடத்தவேண்டியதில்லை. கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளது. இலங்கை, இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை என்று தெரிவித்தார் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்