PM Modi - Russia President Putin [ Image source : PTI]
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தின் வேதனை என்பதை என்னால் உணர முடிகிறது என கூறினார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். அடுத்து நேற்று இரவு ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது சில முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு புதின் சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகின.
இந்த தனிப்பட்ட சந்திப்பை அடுத்து, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் இன்று காலை ரஷ்ய வாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 140 கோடி மக்களின் நம்பிக்கையால் இந்தியா முன்னேறி வருகிறது. பல தாசாப்தங்களுக்கு பிறகு 3வது முறையாக ஒரு அரசு மீண்டும் பதவியில் அமர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரைலர் தான். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி பெரும் என்று பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
அதன் பின்னர் மாஸ்கோவில் உள்ள VDNKh கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்யாவின் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் கிரெம்ளினில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்திற்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி அதிகாரபூர்வ சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், வரும் ஆண்டுகளில் இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன் என்றும் எனக்கு அளித்த மகத்தான வரவேற்புக்கு நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
மேலும், இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளோம். அதற்கு உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் , நீங்களும் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்.
கடந்த 40-50 ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தை சந்தித்து வருகிறது. தீவிரவாதம் எவ்வளவு கொடூரமானது என்பதை 40 ஆண்டுகளாக நாம் சந்தித்து வருகிறோம். எனவே, மாஸ்கோவில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்தபோது அதன் வலி எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
போர், மோதல்கள், பயங்கரவாத தாக்குதல்கள் எதுவாக இருந்தாலும் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிரிழப்பு ஏற்படும் போது வேதனைப்படுகிறார்கள். அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, அப்பாவி குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது, அது மனதைக் கனக்க செய்கிறது. அந்த வலி வேதனை மிகுந்தது என ரஷ்ய அதிபருடனான சந்திப்பில் பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…