அதிர்ச்சி ரிப்போர்ட் ! ஸ்பெயினில் வெப்ப அலையால் பாதிக்கபட்டு 510 பேர் பலி

Default Image

ஸ்பெயினில் வெப்ப அலைக்கு 510 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயின் அமைச்சகத்தின் ஒரு பகுதியான கார்லோஸ் III ஹெல்த் இன்ஸ்டிடியூட் (ISCIII) மூலம் இறப்பு எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அதில் வெப்ப அலைக்கு 510 பேர் பலியாகியுள்ளனர் என பதிவாகியுள்ளது.

வெப்பம் அதிகரித்ததால், வெப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது, என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 10 முதல் 13 வரையிலான நான்கு நாட்களில் இறப்புகள் 15ல் இருந்து 60 ஆக அதாவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியது.இந்நிலையில், சனிக்கிழமை 150 ஆக உச்சத்தை எட்டியது.

இந்த வெப்ப அலை குறிப்பாக அதிக அளவில் முதியவர்களை பாதிக்கிறது. இறந்த 510 பேரில் 321 பேர் 85 வயது அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களே.

ஸ்பெயினின் கோடையில் இது இரண்டாவது வெப்ப அலை. ISCIII இன் படி, முன்பு ஏற்பட்ட வெப்ப அலையில் ஜூன் 11 முதல் 17 வரை, 829 இறப்புகளை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்