சோவியத் யூனியனின் 42 ஆண்டுகால சாதனையை சமன் செய்த, ஸ்பேஸ்எக்ஸ்.!
ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டில் 61 ராக்கெட்களை விண்ணில் செலுத்தி, 42 ஆண்டுகால சோவியத் யூனியன் சாதனையை சமன் செய்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ், தனது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரேலிய பூமி-இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ்-ஆல் 61வது ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், R-7 ராக்கெட் ஏவப்பட்ட 64 முயற்சிகளில் 61இல் விண்ணில் செலுத்தப்பட்டு, 42 ஆண்டுகால சோவியத் யூனியனின் சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமன் செய்துள்ளது. இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஐஏஐ) உருவாக்கியுள்ள, இந்த 400 கிலோ எடை கொண்ட ஈரோஸ் சி3 செயற்கைக்கோள், பூமியின் புகைப்படங்களை 30 செமீ ரெசொலூஷன் தரத்துடன் எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Liftoff! pic.twitter.com/CbGamn17gi
— SpaceX (@SpaceX) December 30, 2022