வீட்டை தாக்கிய விண்வெளி குப்பை! நாஸாவிடம் 80,000 டாலர் கேட்டு கோரிக்கை!

Space Debris

அமெரிக்கா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், உள்ள ஒரு வீட்டில் விண்வெளியில் இருந்து சிறிய விண்வெளி குப்பை ஒன்று வீட்டின் மீது விழுந்துள்ளது. அதில் அந்த வீட்டின் கூரை உடைந்து நொறுங்கியிருக்கிறது.

இதன் காரணமாக அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பமானது நாசாவிடம் 80,000 அமெரிக்க டாலர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்தது சட்ட நிறுவனமான க்ரான்ஃபில் சம்னர் (Cranfield Sumner) செய்தி நிறுவனமான AFPக்கு அறிக்கை ஒன்றை தெரிவித்தார்.

அந்த அறிக்கையில்,”கடந்த மார்ச் 8 ஆம் தேதி அன்று 700 கிராம் எடையுள்ள ஒரு பொருளானது புளோரிடாவின் நேபிள்ஸில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி இருக்கிறது. மேலும், இதனால் அந்த வீட்டின் மேற்கூரையில் ஒரு பெரிய துளையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) கழிவுப்பொருளாக வெளியிடப்பட்ட பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளின் சரக்குக் கட்டையின் ஒரு பகுதி அதான் என்று நாசா பின்னர் உறுதி செய்துள்ளது.

பூமியில் விழுவதற்கு முன் முழுமையாக எரிவதற்கு பதிலாக, அதில் ஒரு பகுதி அப்படியே எரியாமல் வீட்டின் மீது விழுவந்துள்ளது என நாசா மேலும் தெரிவித்திருக்கிறது.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது வீட்டின் உரிமையாளரான ஓடெரோவின் மகன் வீட்டில் இருந்ததாகவும். யாருக்கும் எந்த உடல் காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த ஓடெரோவின் குடும்பம் அமெரிக்கா விண்வெளி துறையான நாசாவிடம் 80,000 டாலர் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதற்கு நாசாவும் விரைவில் பதிலளிப்பார்களா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்