புகைப்பிடிப்பவர்கள் கவனத்திற்கு.! வேலை நேரத்தில் புகைபிடித்ததால் ரூ.9 லட்சம் அபராதம்…
புகைபிடிப்பது உடலுக்கு கேடு என்பது நாம் அனைவரும் தெரியும், ஆனால் அது உங்கள் சம்பளத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா.
சமீபத்தில், ஜப்பானின் ஒசாகாவில் உள்ள அரசு ஊழியர் ஒருவர் வேலை நேரத்தில் புகைபிடித்ததால் அவருக்கு ரூ.8.94 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக ஜப்பானிய செய்தி நிறுவனமான தி மைனிச்சி தெரிவித்துள்ளது.
61 வயதான அந்த அரசு ஊழியர் 14 ஆண்டுகளில் 4,500 முறைக்கு மேல் வேலை நேரத்தில் புகைபிடித்ததற்கால் அபராதம் விதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், விதிமீறலுக்கான தண்டனையில் அவருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு 10 சதவீத ஊதியக் குறைக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் வேலை பார்க்கும் அரசாங்க ஊழியர்கள் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இது தவிர, 2019 முதல், குறிப்பாக அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.