உலகம்

13,500 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவ்..! சாதனை படைத்த 104 வயது மூதாட்டி..!

Published by
லீனா

சிக்காகோவை சேர்ந்த 104 வயது மூதாட்டி டோரத்தி.  இவர் 1918 ஆம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்தார்.தற்போது இவர் வயதானாலும், இவர் கைத்தடி உதவியுடன் தான் நடமாடி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார். விமானத்திலிருந்து குதித்த மூதாட்டி சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து பாதுகாப்பாக தரையிறங்கினார்.

இதற்கு முன்பதாக  தனது 100 வயதில் ஸ்கை டைவ் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் முதலில் தனது 100 வயதில் செய்த போது பயந்ததாகவும் தற்போது தாமாக குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் விடுமுறை நாட்களில் மற்ற நாடுகளுக்கு சென்று சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன், ஸ்வீடனைச் சேர்ந்த 103 வயதான லின்னியா இங்கேகார்ட் லார்சன் என்பவரால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் மிக வயதான ஸ்கைடைவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த சாதனையை 104 வயதான மூதாட்டி டோரதி முறியடித்துள்ளார். விரைவில் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. இவருக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 105 ஆவது வயது தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

18 minutes ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

36 minutes ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

54 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

2 hours ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago