கமலா ஹாரிஸ்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்.!
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பேன் என்று பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா : இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் முக்கிய நேரடி விவாதம் டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே பென்சில்வேனியா மாகாணத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விவாதத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது நிபுணர்களும் வாக்காளர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விவாதம் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே கமலா ஹாரிஸை ஜனாதிபதியாக ஆதரிப்பதாக பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கமலா ஹாரிஸ் VS டிரம்ப் விவாத நிகழ்ச்சியைப் பார்த்தேன். தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்க உள்ளேன். அவர் நான் நம்பும் உரிமைகளுக்காக போராடுகிறார்.
ஏனென்றால் அவர் உரிமைகளுக்காகவும், காரணங்களுக்காகவும் போராடுகிறார், அவர்களை வெற்றிபெற ஒரு போர்வீரன் தேவை என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு நிதானமான திறமையான தலைவர்.
நம் தேசம் அமைதியால் வழிநடத்தப்பட வேண்டும். குழப்பத்தால் அல்ல ” என கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் பதிவிட்டுள்ளார். இவரது ஆதரவு பதிவவுக்கு பலரும் பாசிடிவ் கருத்து தெரிவித்ததோடு, லைக்ஸை குவிந்து வருகிறது.
View this post on Instagram
சில தினங்களுக்கு முன்னர் டொனால்டு டிரம்ப், டெய்லர் ஸ்விஃப்ட்டின் AI இமேஜ்களைப் பயன்படுத்தி, ஸ்விஃப்ட் தனக்கு ஆதரவளிப்பதாக பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.