‘துப்பாக்கிச் சூடு என்னை பலப்படுத்துகிறது’ …அமோக விற்பனையில் டிரம்ப் டி-ஷர்ட்டுகள் !!
டொனால்ட் டிரம்ப் : அமெரிக்காவில் ட்ரம்ப் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளார். எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக இருந்த டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர்.
இந்த துப்பாக்கி சூடு நடந்து டிரம்புக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டும் கூட அவர் தன்னுடைய ஆதரவாளர்களை பார்த்து கைகளை தூக்கி கொண்டு ‘நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்’ என்பது போல செய்கையை கட்டிவிட்டு சென்றார். இதனை பார்த்த அங்கிருந்த ஆதரவாளர்களும் கைகளை தட்டினார்கள்.
அப்போது அவர் கையை தூக்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், அதனை டி-ஷர்ட்டில் அச்சு அடித்து ‘i will never stop’ என்றும், shooting makes me stronger என்ற வாசககத்துடனம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த டி-ஷர்ட் விற்பனைக்கு வந்ததில் இருந்து அமோக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விலைகள் சுமார் $9 முதல் $40 வரை இருக்கும் எனவும், அச்சிடப்பட்டு வெளியான மூன்று மணி நேரத்திற்குள் சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து 2,000 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்த டி ஷர்ட்க்கு வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவிக்கிறது.