‘ஸ்வீட் 16’ பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு..! 4 பேர் உயிரிழப்பு..16 பேர் காயம்..!
அலபாமாவில் நடந்த பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 உயிரிழந்தனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
அலபாமாவின் டேடெவில்லில் உள்ள மஹோகனி மாஸ்டர் பீஸ் டான்ஸ் ஸ்டுடியோவில் பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது திடீரென பிறந்தநாள் விழாவில் அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 16-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், பிறந்தநாள் விழாவில் திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தால் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறினர். மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் அடையாளங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, போலீசார் இச்சம்பவம் குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர். தற்பொழுது வரை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பற்றிய கூடுதல் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு, “இன்று காலை நான் டேடெவில் மக்கள் மற்றும் எனது சக அலபாமியர்களுடன் துக்கப்படுகிறேன். வன்முறைக் குற்றங்களுக்கு எங்கள் மாநிலத்தில் இடமில்லை” என கவர்னர் கே ஐவி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
This morning, I grieve with the people of Dadeville and my fellow Alabamians. Violent crime has NO place in our state, and we are staying closely updated by law enforcement as details emerge.
— Governor Kay Ivey (@GovernorKayIvey) April 16, 2023