டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்புரை மேற்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காது பகுதியில் டொனால்ட் டிரம்பிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். அதில், போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரளவர்களுக்கு முன்னாள் நின்று டிரம்ப் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்கள்.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப் தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, பிரதமர் மோடி, அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் கமலா தேவி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…