Netherlands
நெதர்லாந்து : சேர்ந்த நரைன் மெல்கும்ஜான் என்ற பெண் விமானி, இலகுரக விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு வானில் பறந்தார். வானில் நன்றாக பறந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விமானத்தின் மேற்கூரை காற்றில் திறக்கப்பட்டதால் அந்த பெண் மிகவும் குழப்பமடைந்தது அதிர்ச்சியானார். மேற்கூரை திறந்து காற்று வேகமாக வீசியதால் பெண் பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார்.
பின், வேகமாக வீசிய காற்றில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சிறிது நேரம் விமானத்தில் பறந்து கடைசியில் அந்த பெண் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.இந்த சம்பவம் முழுவதையும் அந்த பெண் விமானத்தை எடுக்கும்போதே கேமராவை ஆன் செய்து பதிவு செய்தார்.
அந்த வீடியோவை அவரே தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுடைய தைரியத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். எனவும், மேலும் சிலர் இனிமேல் செல்லும்போது எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்துவிட்டு விமானத்தை ஓட்டுங்கள் எனவும் கூறி வருகிறார்கள்.
வீடியோ காட்சியில் பார்க்கும்போது நமக்கு கை காலை நடுங்க வைக்கிறது. இந்த சூழலில், அந்த பெண் இந்த சம்பவத்தை எதிர்கொண்டது பற்றியும் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஏரோபாட்டிக் பயிற்சியின் ஒரு பகுதியாக விமானத்தில் எனது இரண்டாவது பயணம் இது. நான் எக்ஸ்ட்ரா 330 எல்எக்ஸ் (எக்ஸ்ட்ரா 330 எல்எக்ஸ் ஆன் போர்டில்) காற்றில் இருந்தபோது விமானத்தின் மேற்கூரை திறக்கப்பட்டது.
புறப்படுவதற்கு முன் சரியான கவனிப்பு எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், சரியான முன்னெச்சரிக்கைகள் எடுத்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும்” எனவும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…