வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்… அமேசானில் 10,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோனது.!?
அமேசான் நிறுவனம் இந்த வாரம் பணிநீக்க வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அமேசான் நிறுவனம் 10,000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அமேசான் தற்போது அந்த வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இது குறித்து வன்பொருள் தலைவர் டேவ் லிம்ப் அதன் பணியாளர்களுக்கு அனுப்பிய மெமோவில், நாங்கள் ஆழமாக யோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம், அதன்படி சில குழுக்களை ஒருங்கிணைத்து சில பதவிகளை அதன்மூலம் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும் இதை சொல்வதற்கு கடினமாக இருப்பதாகவும், சில திறமையான பணியாளர்களை நாம் அமேசானிலிருந்து இழக்கநேரிடும், என்று கூறியுள்ளார். அமெரிக்கா பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவின் படி அமேசான் நிறுவனம் 10,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்தது.
அமேசானின் செய்தித்தொடர்பாளர் கெல்லி நண்ட்டல் கூறிய தகவலின்படி, நிறுவனத்தில் சில பதவிகள் நீண்ட காலத்திற்கு தேவையானதாக இருக்காது, மேலும் பணியிழந்த பணியாளர்களுக்கு அமேசான் நிறுவனம் முழு ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.