பிரபல யூடியூபர் கீனன் காஹில் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு (Open Heart Surgery) பின் காலமானார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் பிறந்த காஹில், பிரபலங்களின் விடீயோக்களுக்கு உதடு அசைவு செய்வதில் (லிப் சிங்க்) சிறந்தவர். சிகாகோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 27 வயதான காஹில் காலமானார். காஹில்லின் சிறுவயதில் அவருக்கு மரபணுக்கோளாறு உள்ளது எனக் கண்டறியப்பட்டது.
Maroteaux-Lamy சிண்ட்ரோம் என்ற மரபணுக்கோளாறால் சிகாகோ மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். Maroteaux-Lamy சிண்ட்ரோம் என்ற மரபணுக்கோளாறானது உடலில் உள்ள பல திசுக்கள் மற்றும் உறுப்புக்களை பெரிதாக்குகிறது. மேலும் எலும்பு முறிவு போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. இந்த கோளாறால் டிசம்பர் 15 ஆம் தேதி திறந்த இதய அறுவை சிகிச்சை (open heart surgery) மேற்கொள்ளப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்தபின்பும் அவருக்கு சில சிக்கல்கள் இருந்தது. இந்த சிக்கல்களால் 29 வியாழன் அன்று சிகாகோ மருத்துவமனையில் லைஃப் சப்போர்ட் எடுக்கப்பட்ட பின்பு காலமானார், என்று அவரது மேனேஜர் டேவிட் கிரஹாம் கூறினார். காஹிலின் மறைவு செய்தியைத் தொடர்ந்து, பல ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…