ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த தொற்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது.
இந்த நிலையில் சீனா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் கணிப்பின்படி ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிலும் சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் தான் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…