உலகின் மிகவும் வயதான பெண் இவர் தான்.!
உலகில் வாழும் மிகவும் வயதான நபர், ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த 115 வயதான பெண் என கின்னஸில் இடம்பிடித்தார்.
உலகின் மிக அதிக வயதான 118 வயது லூசில் ராண்டன் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, மரியா பிரானியாஸ் மோரேரா, உலகின் மிக வயதான நபராக புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மோரேராவுக்கு தற்போது 115 வயது 321 நாட்கள்(ஜன-19வரை) ஆகின்றது. மேலும் அவர் இப்போது உலகின் வயதான பெண்மணி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அவரது பெற்றோர் அமெரிக்காற்கு குடிபெயர்ந்த ஒருவருடத்திற்கு பிறகு, மரியா பிரானியாஸ் மோரேரா மார்ச் 4, 1907 அன்று சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பிறகு 8 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் ஸ்பெயினுக்குத் திரும்பினர்.