பாலியல் உறவு என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த ஒரு அழகான விஷயம் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஒரு கூட்டம் கடந்த ஆண்டு நடந்தது , இதில் கலந்து கொண்டு பேசிய போப் பிரான்சிஸ் பாலியல் உறவு மற்றும் அது சார்ந்த நம்பிக்கைகள் குறித்த விஷயங்களை பேசினார்.
போப் அன்ஸ்வெர்ஸ்
இந்த கூட்டத்தை டிஸ்னி ஆவணப்படமாக தயாரித்துளளது. தி போப் அன்ஸ்வெர்ஸ் என்ற ஆவணப்படத்தில் போப் பிரான்சிஸ் பேசியிருந்தது இடம்பெற்றுள்ளது.
இந்த ஆவணப்படத்தில், பாலுறவு, ஓரினச்சேர்க்கையாளர்கள் உரிமைகள், கருக்கலைப்பு, பாலியல் தொழில், தேவாலயங்களில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
பாலில் உறவு அழகான ஒன்று
பாலில் உறவு குறித்து அவர் பேசுகையில், பாலியல் உறவு என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த ஒரு அழகான விஷயம். பாலியல் ரீதியாக உங்களை வெளிப்படுத்துவதற்கு இதுவே மிக சிறந்த வழி என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர் கூறுகையில் கத்தோலிக்க திருச்சபைகளில் திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும். அவர்களை மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அவர்களை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இறைவனின் குழந்தைகள்தான் நாம் அனைவரும். இறைவன் யாரையுமே நிராகரிக்கவில்லை. ஒருவர் திருச்சபைக்கு வரக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு குறித்து அவர் கூறுகையில், கர்ப்பத்தை கலைத்த பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். இறைவன் கொடுப்பதை கலைப்பது தவறான செயல். இந்த நடைமுறை ஏற்றுக் கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி அவர் கூறுகையில், LGBT சமூகத்தினர் கத்தோலிக்க தேவாலயங்களால் வரவேற்கப்பட வேண்டியவர்களே கடவுள் யாரையும் வெறுப்பதில்லை. கடவுள் நமது தந்தை. அதனால் தேவாலயத்தில் யாரையும் வெளியேற்றும் அதிகாரம் எனக்கில்லை என தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் நடத்திய மனம் திறந்த உரையாடலின் தொகுப்பு வாட்டிகனின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. பாப் செக்ஸ் குறித்து பேசி இருந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…