ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம்!திருட்டு கும்பலை தேடும் காவல்துறை!
- ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது.இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை திருடிய கும்பலை காவல் துறையினர் தேடிவருகினறன.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், கிரேட்டர் சிட்னி நகரங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.இந்த நாடுகளில் மழைபெய்யும் அளவும் குறைவாகவே உள்ளது.
எனவே இந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தடுக்க வாகனங்களை கழுவ இரண்டு வாளி தண்ணீர் மட்டுமே பயன் படுத்த வேண்டும்.அதே போல் நீச்சல் குளங்களில் நீர் நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இந்த பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் அங்குள்ள இவான் பிளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள பொது தண்ணீர் தொட்டியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை யாரோ மர்மமான முறையில் திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.