கடும் பொருளாதார நெருக்கடி, வன்முறை போராட்டங்கள்…பாகிஸ்தானில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.!
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ.300 என வரலாறு காணாத வீழ்ச்சி.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, இதனால் அங்கு விலைவாசி உயர்வு என அந்நாட்டையே பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இது தவிர பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரின் கைதுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரம் அந்நாட்டில் ராணுவத்தையே களமிறக்கியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு ரூ.300 ஆக சரிந்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறைப் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் களமிறங்கியதால், பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு புதிய வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததாகக் கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு 3.3% சரிந்து ஒரு டாலருக்கு 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.