சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு.! மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.!
சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறது.
சூடானில் கடந்த 3 நாட்களாக அந்நாட்டு ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் ராணுவ மோதல் நிலவி வருகிறது.
இந்த மோதலில் கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் ஏற்கனவே 180 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 270 ஆக உயர்ந்துள்ளதாகவும் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 1,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூடானில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வரும் நிலையில் இந்தியர்களுக்கு 24×7 உதவும் வகையில் வெளியுறவு அமைச்சகம் (MEA) சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்திருந்தது. இந்நிலையில், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அமெரிக்கா, இங்கிலாந்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஆகிய நாடுகளுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
அவர் பதிவிட்ட ட்வீட்டில், சூடான் நிலைமை குறித்து சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் எச்.எச்.பைசல்பின் ஃபர்ஹானிடம் பேசியதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மேலும், கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்திய சமூகத்தின் நிலை குறித்த வழக்கமான அறிக்கைகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Spoke to Foreign Minister of Saudi Arabia, HH @FaisalbinFarhan just now.
Appreciated his assessment of the Sudan situation. Will remain in close touch.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 18, 2023