ரஷ்யாவின் தேசிய தினம்… உக்ரைன் போருக்கும் முழு ஆதரவு- வட கொரிய அதிபர் கிம்.!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகோர்ப்பதாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தேசிய தினத்தை முன்னிட்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். மேலும் ரஷ்யாவுக்கு தனது முழு ஆதரவும் வழங்குவதாக அறிவித்துள்ளார். சக்திவாய்ந்த நாட்டை உருவாக்குவதற்கான இரு நாடுகளின் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கும் புதினுடன் கைகோர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
உக்ரைன் ஆக்கிரமிப்பு குறித்த விவகாரத்திலும் தனது முழு ஆதரவையும், அளிப்பதாக அவர் அந்த வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டின் இறையாண்மை உரிமைகள், வளர்ச்சி மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான ரஷ்யாவின் புனிதமான நோக்கத்தை செயல்படுத்துவதற்கான அவர்களின் முழுப் போராட்டத்தில் எங்களது முழு ஆதரவும் உண்டு.
நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், ரஷ்ய மக்கள் இதில் வெற்றி பெற்று வரலாற்றில் பெருமை சேர்ப்பார்கள் என்றும் கிம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதன் பின், ரஷ்யாவிற்கு வடகொரியா தரப்பில் இருந்து ஆதரவு வருவது இது சமீபத்தியதாகும்.