உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து 9 மாதங்களில், ரஷ்யா ஒரேநாளில் 100 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது.
ரஷ்யப்படைகளால் 100 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும், அவை பெரும்பாலும் உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பின் மீது குறி வைத்து ஏவப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது, மேலும் போர் தொடங்கி 9 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது.
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறும்போது, இதன்மூலம் ரஷ்யாவிற்கு என்ன வேண்டும் என்பது தெரிகிறது, 85 ஏவுகணைகள் இதுவரை இங்கே விழுந்துள்ளது, இன்னும் வந்து கொண்டிருக்கிறது, உக்ரைன் தலைநகர் கீவில் 5 மாடிக்கட்டிடம் தாக்குதலில் தீப்பற்றிக்கொண்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்தார், மேலும் நகரின் நிறைய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மற்றும் நாட்டின் பல இடங்களிலும் இந்த ஏவுகணை தாக்குதலின் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியிருக்கிறது. தன்னார்வலர்கள் மக்களுக்கு தேவையான உதவி செய்து வருகின்றனர். மீட்புக்குழுவினர் தாக்குதல் நடந்த இடங்களில் காயம்பட்டவர்களை மீட்டு வந்தனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…