மொழிபெயர்ப்பு மைக்கால் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்.! வாய்விட்டு சிரித்த ரஷ்ய அதிபர்.!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமருக்கு மொழிபெயர்ப்பு மைக் சரியாக மாட்டிக்கொள்ளாமல் கிழே விழுந்தது. அந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.
இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிஜிங்பிங், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களும் கலந்துகொண்டார்
அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் சந்தித்துக்கொண்டனர். இரு நட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினர்.
அந்த சமயம் இருவருக்கும், தனித்தனி மொழிபெயர்ப்பு மைக் கொடுக்கப்பட்டது. அதனை காதில் மாட்டிக்கொண்டால், இருவரும் தாய்மொழியில் பேசி கொள்ளலாம். அதே தாய் மொழியில் அந்த மைக் வழியாக மொழிமாற்றி தகவல் நமக்கு தெரிய வரும்.
அதனை ரஷ்ய அதிபர் சரியாக மாற்றிவிட்டார். ஆனால், பாகிஸ்தான் அதிபர் அதனை தனது காதில் மாட்டிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். அது காதில் மாட்டிக்கொள்ளவில்லை யாரேனும் உதவி செய்யுங்கள் என கூறவே, உதவியாளர் வந்து உதவி செய்தார். இருந்தும் அந்த மைக் கேழே விழுந்துவிட்டது.
இதனை எதிரில் இருந்து பார்த்த ரஷ்ய அதிபர் புதின் வாய்விட்டு சிரித்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. புதின் சிரித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.