உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போரில் இரு நாடுகளும் பின்வாங்காமல் போராடிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைனின் மின் கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்தது.
இந்த தாக்குதலால் உக்ரைன் மக்கள் அனைவரும் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்தனர். இதனையடுத்து நேற்று காலை உக்ரைனை தாக்குவதற்கு ரஷ்யா ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. ஏவுகணைகள் மட்டுமன்றி சுயமாக வெடிக்கும் ஆளில்லா விமானங்களையும் உடன் அனுப்பியுள்ளது.
இந்த தாக்குதலில் 11 பேர் இறந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவும் ஜெர்மனியும் உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்ததையடுத்து இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனி, உக்ரைனுக்கு உதவ பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்ததைத் தொடர்ந்து உக்ரேனியப் படைகளுக்கு நான்கு பீரங்கிகளை அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…