உக்ரைனை தாக்கியது ரஷ்ய ஏவுகணை..! 11பேர் உயிரிழப்பு..!

Default Image

உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போரில் இரு நாடுகளும் பின்வாங்காமல் போராடிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைனின் மின் கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்தது.

[Image Source: Getty Images]

இந்த தாக்குதலால் உக்ரைன் மக்கள் அனைவரும் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்தனர். இதனையடுத்து நேற்று காலை உக்ரைனை தாக்குவதற்கு ரஷ்யா ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. ஏவுகணைகள் மட்டுமன்றி சுயமாக வெடிக்கும் ஆளில்லா விமானங்களையும் உடன்  அனுப்பியுள்ளது.

M1 Abrams battle tanks
M1 Abrams battle tanks [Image Source : AP]

இந்த தாக்குதலில் 11 பேர் இறந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவும் ஜெர்மனியும் உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்ததையடுத்து இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனி, உக்ரைனுக்கு உதவ பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்ததைத் தொடர்ந்து உக்ரேனியப் படைகளுக்கு நான்கு பீரங்கிகளை அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்