உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் இலியுஷின் Il-76 இராணுவ போக்குவரத்து விமானம் இன்று ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 65 உக்ரேனிய போர்க் கைதிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்ய இராணுவ விமானத்தில் பயணித்த 65 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதிபர் வேட்பாளருக்கான தேர்தல்.. டொனால்ட் ட்ரம்புக்கு முதல் வெற்றி!
போர் கைதிகளுடன் விமானத்தில் 6 பணியாளர்கள், 3 துணை ராணுவ வீரர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடம் உக்ரைனின் எல்லையை ஒட்டியுள்ளதாகவும், கடந்த சில மாதங்களாக இந்த எல்லைப் பகுதியில் உக்ரைனில் இருந்து தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
பெல்கோரோட் கவர்னர் கூறுகையில், உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டினார். மேலும், வடகிழக்கு பகுதியில் உள்ள பெல்கோரோட் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், சம்பவ இடத்தை ஆய்வு செய்ய உள்ளோம் என ஆளுநர் கூறியதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…