உக்ரைனில் இறுதி ஊர்வலத்தில் ரஷ்ய விமானப்படை தாக்குதல்.! 51 பொதுமக்கள் பலி.!

Russian Missile Strike

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று ரஷ்யா, உக்ரைன் மீது தனது முழுப் படையெடுப்பைத் தொடங்கியது. உக்ரேனிய உள்கட்டமைப்பை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யா குறிவைத்து தாக்கியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்த போரில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

போர் சுமார் ஒன்றரை வருடங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், இன்னமும் அங்கு இயல்பு நிலைத் திரும்பாமல் உள்ளது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இருந்தும் அவ்வப்போது தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி, உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் கிட்டத்தட்ட 330 பேர் வசிக்கும் ஹ்ரோசா கிராமத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஹ்ரோசா கிராமத்தில் இறந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக மக்கள் ஒன்றாகக் கூறி இருந்துள்ளனர்.

அப்போது, ரஷ்யா இஸ்கந்தர் ஏவுகணை மூலம் மக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எட்டு வயது சிறுவன் உட்பட 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலை உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் கண்டித்துள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், “ரஷ்யாவின் இந்த செயலை மிருகத்தனமான செயல் என்றும் அழைக்க முடியாது. ஏனென்றால், அவர்களை மிருகங்கள் என்று அழைப்பது, மிருகங்களை அவமதிக்கும் செயலாகும். ரஷ்யா வேண்டுமென்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi
Vijaya prabhakaran - DMDK