அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் எண்ணெய் விநியோகத்தை தடை செய்யும் ரஷ்யா
விலை வரம்பை ஆதரிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை தடை செய்யப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா அதிபர் புதின், பிப்ரவரி 1, 2023 முதல் ஜூலை 1, 2023 வரையிலான விலை வரம்பை நிர்ணயம் செய்வதில், பங்கேற்கும் நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை வழங்குவதை தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
இதில் ஜி-7 நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்த மாதம் ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெய் பீப்பாய் 60டாலருக்கு என விலை வரம்பை ஒப்புக்கொண்டதை அடுத்து ரஷ்யா இந்த முடிவுக்கு வந்துள்ளது.