“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!
இரண்டாம் உலகப் போர் வெற்றி ஆண்டு நினைவை முன்னிட்டு மூன்று நாள் தாற்காலிக்காக போர் நிறுத்தத்தை புதின் அறிவித்திருக்கிறார்.

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது பெரும் கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டாம் உலகப் போரின் வெற்றி ஆண்டு நினைவை முன்னிட்டு மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் மே மாதம் 9-ஆம் தேதி கொண்டாடப்படும் வெற்றி தினத்தை மையமாகக் கொண்டு, மே 8 முதல் 10 வரை போர் நிறுத்தம் என்பது அமலில் இருக்கும் எனவும் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய விளாடிமிர் புதின் ” இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு வரும் மே 8 முதல் 10 -ஆம் தேதி வரை தற்காலிமாக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
உக்ரைன் தரப்பு இந்த போர் நிறுத்த முடிவை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உக்ரைன் தரப்பு போர் நிறுத்த மீறல்களைச் செய்தால், ரஷ்ய ஆயுதப் படைகள் போதுமான மற்றும் பயனுள்ள பதிலை வழங்கும். அதைப்போல, முன்நிபந்தனைகள் இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்ய தரப்பு மீண்டும் ஒருமுறை தயாராகவும் இருக்கிறது ” எனவும் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினம் ரஷ்யாவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சோவியத் யூனியனின் நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி நினைவுகூரப்படுகிறது. எனவே, இந்த மாதிரி ஒரு நாளில் விளாடிமிர் புதின் இப்படியான அறிவிப்பை ரஷ்யா -உக்ரைன் போரின் பரபரப்பை குறைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த போர் நிறுத்தம் உக்ரைனில் உள்ள மக்களின் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வாக அமையுமா என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த காலங்களில், ரஷ்யாவின் போர் நிறுத்த அறிவிப்புகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இந்த முறையும், போர் நிறுத்தம் உண்மையிலேயே அமல்படுத்தப்படுமா? என உக்ரைன் அரசு உன்னிப்பாக கவனிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் பலமுறை தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு ஒரு புதிய தொடக்கமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025