ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டு முடிவு..! உக்ரைன் அதிபர் பகிர்ந்த உணர்ச்சிகரமான வீடியோ வைரல்..!
உக்ரைன் அதிபர் ஓராண்டு போர் குறித்து பகிர்ந்துள்ள ‘ஒரு வருடம் கண்ணீர்’ வீடியோ வைரலாகி வருகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைகிற நிலையில், உக்ரைன் அதிபர் ஓராண்டு போர் குறித்து ‘ஒரு வருடம் கண்ணீர்’ என்ற வலி, துக்கம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றைக் காட்டும் உணர்ச்சிகரமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
On February 24, millions of us made a choice. Not a white flag, but the blue and yellow one. Not fleeing, but facing. Resisting & fighting.
It was a year of pain, sorrow, faith, and unity. And this year, we remained invincible. We know that 2023 will be the year of our victory! pic.twitter.com/oInWvssjOI— Володимир Зеленський (@ZelenskyyUa) February 24, 2023
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று, ரஷ்யா உக்ரைன் மீது தனது முழுப் படையெடுப்பைத் தொடங்கியது. இந்த தாக்குதல் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஒரு மிகப்பெரிய தாக்குதல் ஆகும். உக்ரைனை வென்று அங்கு தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தும் முயற்சியில் ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலும், தனது நாட்டை பாதுகாக்கவும் உக்ரைன் போராடி வருகிறது.
ஓராண்டு போர் முடிவடைந்தா நாளான இன்று உக்ரைன் மீது மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யா வெற்றி பெறும் என்று முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் சபதம் செய்தார். ஆனால் 2023 தனது நாட்டிற்கு வெற்றியைத் தரும் என்று ஜெலென்ஸ்கி நம்பிக்கையுடன் உள்ளார். அதன் படி போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.