அணுமின் நிலையத்திற்கு குறி வைத்த ரஷ்யா – உக்ரைன்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

nuclear plant

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த சதி செய்வதாக இரு நாடுகளும் குற்றசாட்டு.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் போர் நீடித்து தான் வருகிறது. இந்த சமயத்தில், உக்ரைனில் போரிட ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறக்கப்ட்ட வாக்னர் படை, அந்த நாட்டுக்கு எதிராக திரும்பி போர் தொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன்பின், பேச்சுவார்த்தையின் மூலம் வாக்னர் படை தங்களது தாக்குதலை கைவிட்டது.

இந்த நிலையில், ரஷ்யாவும், உக்ரைனும் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் கலந்த வெடிமருந்துகளை வீச உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா குற்றசாட்டியுள்ளது.  அதே நேரத்தில் ரஷ்ய துருப்புக்கள், அணுமின் நிலையத்தில் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றசாட்டியுள்ளது.

பிப்ரவரி 2022இல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, தென்கிழக்கு உக்ரைனில் உள்ள அணுமின் நிலையம் ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ளது. உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, ஆறு உலைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றின. தற்போது இரு நாடுகளும் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்