உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் படையை குறைக்கும் ரஷ்யா..!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே படையை குறைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக ரஷ்ய குழுவினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே படையை குறைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.