உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யாவிற்கு பித்து பிடிக்கவில்லை-புதின்
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யாவிற்கு பித்து பிடிக்கவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த தாக்குதலுக்கு, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உதவியுடன் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதற்கு பதிலளித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது, ரஷ்யாவிற்கு இன்னும் அந்த அளவுக்கு பித்து பிடிக்கவில்லை.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில் புதின் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், உக்ரைனுக்கு எதிராக நாங்கள் ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அது நீண்ட கால போராக நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜெர்மன் அரசியல் தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ், இது குறித்து பேசும்போது, சர்வதேச நாடுகளின் அழுத்தம் போன்றவற்றால், ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டல் தற்போது குறைந்துள்ளது. உக்ரைனுக்கு உதவி செய்வதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனி இருக்கும் என்றும் தேவையான ஆயுதங்களை வழங்க ஜெர்மனி தயாராக இருக்கும் என்றும் ஷோல்ஸ் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு நேட்டோவிற்கும் இடையே நேரடியாக எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ஜெர்மனி அனைத்து நடவடிக்கைகளையும் செய்யும் என்றும் அவர் கூறினார். அவ்வாறு நடந்தால் அது உலக நாடுகளுக்கு பேரிழப்பாக இருக்கும்.